அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்ததால் அவரை முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் ஷேவாக் விஞ்ஞானி என்று பாராட்டி டிவிட் செய்தார் அந்த டிவிட் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி ஓருநாள் தொடரில் தோல்வியை தழுவி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தொடர்ந்து அந்நாட்டில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வங்கதேசத்தை வென்றது. இரண்டாவது டெஸ்டிலும் வென்றால் டெஸ்ட் கோப்பையை வென்று விடலாம் என்ற நோக்கத்தில் இந்திய அணி தொடர்ந்து விளையாடி வந்தது.
முதலாவது இன்னிங்ஸை ஆடி வந்த வங்கதேச அணி தொடர்ந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை எடுத்தது. இந்திய அணியினர் சொதப்பி வந்த நிலையில் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி இந்திய அணிக்கு 314 ரன்களை சேர்த்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடி வந்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை மட்டுமே இந்திய அணிக்கு இலக்காக வைத்தது. இந்த சிறிய இலக்கை இந்திய அணியின் பேட்டர்கள் எளிமையாக வென்று விடுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வந்தனர்.
இந்திய அணியின் மிக முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வந்த வங்கதேச அணியின் பவுலர்கள் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸை ஆகியோரின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தவித்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அஸ்வின் 62 பந்துகளில் 4 பவுன்டரி 1 சிக்ஸருடன் 46 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றி பெற வழி வகுத்தார். இதனால், ஆட்ட நாயகன் பரிசையும் பெற்றார்.
இதையும் படியுங்கள்: IPL MINI AUCTION: ஐபிஎல் மினி ஏலம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
இதனை பார்த்த முன்னாள் இந்திய அணியின் கேப்டனான ஷேவாக் அஸ்வினை ஓரு விஞ்ஞானி என டிவிட் செய்தார். அந்த டிவிட் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகின்றது.
The scientist did it. Somehow got this one. Brilliant innings from Ashwin and wonderful partnership with Shreyas Iyer. pic.twitter.com/TGBn29M7Cg
— Virender Sehwag (@virendersehwag) December 25, 2022
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.