இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

0
18

இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக முதல் முறையாக நடித்திருக்கும் படம் பகாசூரன் அப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்த மோகன் ஜி. 

இயக்குனரும் நடிகருமாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் செல்வராகவன் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார்.

இந்நிலையில், ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பகாசுரன்’. இதில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷி நடித்திருக்கிறார்.

முன்னதாக படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளயிட்டபட்டு ரசிகர்களை கவர்ந்தது. அதில் மகாபாரதம் புத்தகம் இருக்க மேலே, ‛முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற கேப்ஷனும் உள்ளது. சிவப்பு நிறத்தில் ‛பகாசுரன்’ பட தலைப்பு காணப்பட்டது.

இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

இவர்களுடன் நட்டி என்கிற நட்ராஜ், ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் மோகன் .ஜி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். படபிடிப்பு நிறைவு பெற்றதால் இந்த படத்தின் டீசர் வெளிட்டு தேதியை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் நாளை 28.08.2022 காலை 10.30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். இது சம்பந்தமான புதிய போஸ்டர் ஓன்றையும் வெளியீட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here