கோவை சரளாவின் ‘செம்பி’ பட டிரெய்லர் ரிலீஸ் தேதியுடன் வெளியானது

0
2

செம்பி: ‘மைனா’, ‘கும்கி’ படங்களின் மூலம் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் பிரபு சாலமன். மிகவும் எளிமையாக மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. மைனா படத்தில் பேருந்து பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பேருந்து பயணத்தை வைத்து த்ரில்லிங்கான கதைக்களத்தை ‘செம்பி’ படத்தின் மூலம் கையாண்டு வருகிறார் இயக்குனர் பிரபு சாலமன்.

கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் வரை 24 பயணிகளுடன் செல்லும் பேருந்தில் வழியில் நடக்கும் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1985ம் ஆண்டு மாடல் கொண்ட பழைய பேருந்து ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா சீரியஸான பெண் பயணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின், தம்பி ராமையை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஜூன் மாதம் இயக்குனர் செல்வராகவனால் வெளியிடப்பட்டது. இந்த படம் வருகிற 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் புதிய டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here