செவ்வாழையின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்களை அறிவோம்: இயற்கை நமக்கு பல நன்மை தரும் பழங்களையும் உணவு பொருட்களையும் அளிக்கும் ஓர் கொடையாளியாக உள்ளது. தமிழரின் உணவு வகைகளில் முதன்மையாக விளங்கியது முக்கனிகள் தேர்வர்கள் முதல் மக்கள் வரை விரும்பி உண்ணும் பழங்களாகவும் முக்கனிகள் உள்ளன. இம்முக்கனிகளை தெய்வங்களுக்கு வைத்து படைக்கவும் செய்கிறோம்.
இதையும் கவனியுங்கள்: சளி, இருமலை விரட்டிடும் கொள்ளு ரசம் செய்யும் எளிய வழிமுறைகள்
முக்கனிகள் என்றால் மா, பலா, வாழை அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வின் முக்கனிகளின் பயன்பாடு வெகுவாக உள்ளது. அதில் செவ்வாழை மிகவும் இயற்கையான மற்றும் மருத்துவ குணம் பொருந்திய பழமாக இருந்து வருகிறது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா எனக் கூறப்பட்டாலும் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே இந்த செவ்வாழை பயிரிடப்பட்டு அன்றாட வாழ்வில் அதனை சாப்பிட்டும் வந்துள்ளனர்.
பல மருத்துவ குணங்களை கொண்ட செவ்வாழையின் பயன்களை இப்பதிவில் அறியலாம்.

வாழையின் வகைகள்:
அன்றாடம் பயன்படுத்தும் பழங்களில் ஓன்றாகவும் தெய்வத்திற்கு வைத்து படைக்கும் பழங்களில் முதன்மையாகவும் காணப்படும் வாழைப்பழங்கள். பல வகைகளை உடையதாக உள்ளது.
பூ வாழை, தேன் வாழை, மலை வாழை, பச்சை வாழை, ரஸ்த்தாலி, நேந்திரம், மொந்தன், பேயன், பச்சை நாடா, கற்பூரவள்ளி, நவரை வாழை, கரு வாழை, எலச்சி வாழை, செவ்வாழை, கோடுவா வாழை என பல வகைகளை உடையதாக காணப்படுகிறது.
செவ்வாழையில் காணப்படும் வைட்டமின்கள்:
பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் செவ்வாழைதான்.
மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது.
செவ்வாழை பழத்தின் நன்மைகள்:
- செவ்வாழை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் அறிய மருந்தாக செவ்வாழை விளங்குகிறது.
- உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்து காணப்படும் ஒரு பழமாகவும் செவ்வாழை பழம் இருக்கிறது.
- செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க வல்லதாக உள்ளது.
- மாலைக்கண் நோயால் அவதிப்படும் மக்கள் தங்கள் இரவு உணவிற்குப்பின், தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
- தினந்தோறும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வருவதால், உடலில் ஏற்படும் சொறி – சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் இரவு உணவிற்குப்பின், தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழப்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுவடையும்.
- கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை படைத்ததாக செவ்வாழைப் பழம் உள்ளது.
- ஜிரணக் கோளாறு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தினம் ஓரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- திருமணம் ஆன தம்பதினருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க இந்த செவ்வாழை பழத்தை கொடுப்பர்.
- மலச்சிக்கல் மற்றும் மூல நோயால் அவதிப்படுபவர்கள் இந்த வாழைப்பழத்தை தினமும் உண்டு வந்தால் விரைவில் குணமாகும்.
இப்படி எண்ணற்ற மருத்துவ குணங்கை அள்ளி தரும் செவ்வாழையை இரவு உறங்குவதற்கு முன் 2 மணி நேரத்திற்கு முன்ரே உண்பது நல்ல பலனை தரும்.
மேலும் இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.