துணிவு ஷாம்: நடிகர் ஷாம் அவர்கள் சினிமாவில் சிறு சிறு வேடங்கள் ஏற்று பின்பு ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு உட்பட வெவ்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் சில வருடங்ககளுக்கு முன்பு ஜெயம் ரவியுடன் இணைந்து ‘தில்லாலங்கடி’ படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்பு அவர் தற்போது வெளியான ‘வாரிசு’ படத்தில் தளபதி விஜய்யின் சகோதரராக நடித்துள்ளார். இதற்கு முன்பு விஜய்யுடன் ‘குஷி’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் இணைந்து நடித்திருந்தார். ஆனால் வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
அவ்வப்போது வாரிசு படம் குறித்தும், தளபதி விஜய் குறித்தும் பல பேட்டிகளில் நடிகர் ஷாம் தன் அனுபவங்களை பகிரந்து வருகிறார். அதேபோல் ‘துணிவு’ படம் குறித்தும் நடிகர் ஷாம் கூறியதாவது, ‘ துணிவு படத்தில் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால் இயக்குனர் வினோத் கேட்ட தேதிகளும் வாரிசு படத்திற்கான எனது தேதிகளும் ஒரேசமயத்தில் இருந்ததால் என்னால் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனது’ என்று அவர் கூறியுள்ளார்.