உலகம் முழுவதும் கடந்த 25ந் தேதி வெளியாகிய பதான் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை 500 கோடிகளுக்கு மேல் அள்ளி பாலிவுட்டை தலைநிமிர வைத்து வருகிறது.
பாதான் திரைப்படத்தில் ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடிப்பில் கடந்த 25ந் தேதி உலகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆக்ஷன், நகைச்சுவை, த்ரில்லர் போன்ற கதையம்சம் கொண்ட படமாக வெளியாகி தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். உலகம் முழுவதும் உள்ள 8500 தியேட்டர்களில் இப்படம் வெளியாகி உள்ளது. படம் வெளியாகி 5 நாட்களில் 500 கோடிகளை கடந்து புதிய வரலாற்றை நிகழ்த்தி வருகிறது.

இதணையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழு மற்றும் நடிகர்கள் ஷாருக்கான், ஜான் ஆப்ரகான், சல்மான் கான், தீபிகா படுகோனே பேசினர். படத்தின் வெற்றியைப் பற்றி பேசுகையில், பார்வையாளர்களுக்கு ஒரு செய்தியை கூற விரும்புவதாகக் கூறினார். திரைப்பட இயக்குநர்கள் செய்வது நல்ல மற்றும் கெட்ட வேலை என எதுவாக இருந்தாலும் அவர்களின் ஒரே நோக்கம் பொழுதுபோக்கு தான் என்றார்.
“மகிழ்ச்சியை பரப்புவதற்காக திரைப்படங்களை உருவாக்குகிறோம். நல்லது கெட்டது என நாம் தவறுகளையும் செய்கிறோம். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால் திரைப்படங்களைத் தயாரிப்பதற்குப் பின்னால் உள்ள நமது நோக்கம் தெளிவாக உள்ளது. நான் கெட்டவனாக நடித்தாலும் மகிழ்ச்சி, அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்ப விரும்புகிறேன். நாங்கள் யாரும் கெட்டவர்கள் அல்ல, உங்களை மகிழ்விப்பதற்காக நாங்கள் அனைவரும் கதாபாத்திரங்களில் நடிக்கிறோம் என நடிகர் ஷாருக்கான் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: ஏகே 62 படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.