காமன் வெல்த் போட்டியில் 4 பதக்கங்களை வென்ற தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு

0
14

காமன் வெல்த் போட்டியில் 4 பதக்கங்களை வென்ற தமிழக வீரர் சரத் கமலுக்கு சென்னையில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

காமன்வெல்த் போட்டி 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து முடிவடைந்தது.12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் 1 ஒரு வெள்ளி வென்று, 40 வயதில் தொடர்ந்து விளையாடிச் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை உலகத்திற்கு நிரூபித்துள்ளார். குறிப்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தன்னுடன் 16 வயது குறைந்த போட்டியாளரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தங்கப் பதக்கத்தைத் தட்டி சென்றுள்ளார்.

காமன் வெல்த் போட்டியில் 4 பதக்கங்களை வென்ற தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு

இந்த போட்டியில் 3 தங்கம் 1 வெள்ளி என்று 4 பதக்கங்களுடன் அசத்தியவர் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல். முதல் ஆட்டத்தில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் இந்திய ஆடவர் குழுவுடன் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் சத்யன் உடன் இணைந்து விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா என்ற வீரகனையுடன் இணைந்து மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றார். இறுதியாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லியாம் பிட்ச்ஃபோர்ட் என்ற வீரரை இறுதிக் கட்டத்தில் 4க்கு 1 என்று வீழ்த்தி தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், காமன் வெல்த் போட்டிகள் முடிந்து சென்னை திரும்பிய சரத் கமலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here