லண்டன் ‘எம்பயர்’ இதழில் 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்

0
13

ஷாருக்கான்: லண்டனிலிருந்து வெளியாகும் ‘எம்பயர்’ மாத இதழ் சர்வதேச அளவில் அனைத்து காலக்கட்டத்திலும் போற்றப்படும் சிறந்த 50 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முக்கியமான நடிகர்களான மார்லன் பிராண்டோ, டாம் ஹாங்க்ஸ், கேட் வின்ஸ்லெட், டாம் குரூஸ், கிறிஸ்டியன் பேல் மற்றும் லியானர்டோ டிகாப்ரியோ உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கும் இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து நடிகர் ஷாருக்கான் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த இதழின் பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார்.

sharukh khan becomes only indian among worlds 50 best actor in all time

ஷாருக்கான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எம்பயர் இதழில் அவரின் திரையுலகில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களையும் மேற்கோள்காட்டியுள்ளது. அதன்படி, ‘தேவதாஸ்’ படத்தில் அவரது தேவதாஸ் கதாபாத்திரத்தையும், ‘மை நேம் இஸ் கான்’ படத்தில் ரிஸ்வான் கான் கதாபாத்திரத்தையும், ‘குச் குச் ஹோதா ஹை’ படத்தில் ராகுல் கன்னா கதாபாத்திரம், ‘ஸ்வேதஸ்’ படத்தில் மோகன் பார்கவ் கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளன.

மேலும் அந்த இதழ் ஷாருக்கான், ‘மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது. தொடர்ந்து ‘அதிசயமும் திறமையுமில்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பதான்’ படத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் ஷாருக்கானுக்கு கிடைத்திருக்கும் இந்த சர்வதேச அங்கீகாரம் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here