ஜவான்: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்தி படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ராம் சரணிடம் பேசியுள்ளனர். அவர் இப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. அதில் ஷாருக்கான் தகடு பெல்ட்டால் வில்லன்களை அடிப்பது போன்ற சில நொடி காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால் ஷாருக்கான் தரப்பும் இயக்குனர் அட்லீயும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காட்சியை இணைய தளத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.