இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக ஓன்றிய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
ஓன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மொத்தம் 12,044 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 40 சதவீத கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் முதல்வர் இல்லாமல் இயங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 1,162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் சிறந்த கல்வி பெற முடியாத நிலை உள்ளதாகவும் உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என்பது முன்பு கேந்திரிய வித்யாலயா, மத்திய பள்ளிகள் என அழைக்கப்பட்டு வந்தது. அந்த பள்ளியை நிர்வகிக்கும் முழு பொறுப்பு கல்வி அமைச்சகத்திடம் உள்ளது. இந்த பள்ளிகள், பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் உட்பட மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்காக இரண்டாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1963 இல் தொடங்கப்பட்டது.

மாணவர்களின் பெற்றோர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பிருப்பதால், குழந்தைகளின் கல்வி தடைபடாமல் பார்த்துக்கொள்வதே இதன் நோக்கமாகும். தற்போது, நாட்டில் சுமார் 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் மானிய விலையில் தரமான கல்வியை வழங்குவது மட்டுமின்றி CBSE வாரியத்தின் முடிவுகளில் சிறந்த இடத்தை பிடித்து வருவதால், பலருக்கு விருப்பமான இடமாக திகழ்கிறது.
இப்பள்ளியில், சுய தொழில் செய்வோர், தனியார் துறையில் பணியாற்றுவோரும் தங்களுக்குரிய பகுதியில் கேந்திரிய வித்யாலயாவில் பிள்ளைகளை சேர்க்கலாம். இருப்பினும் முன்னுரிமை அடிப்படையில்தான் பள்ளியில் சேர்க்கை நடைபெறும்.
மேலும், இப்பள்ளியில் சேர்க்கைக்கு எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் சிபாரிசு செய்யலாம் இவர்கள் மூலமாக 10 இருக்கைகள் வரை ஓதுக்கீடு கிடைக்கும். சமீபத்தில் இவ்வொது கீட்டை மத்திய அரசு நிராகிரத்து குறிப்படத்தக்கது. இந்த நிலையில் இப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதை ஓன்றிய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.