ஸ்ருதி ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தமிழில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் 3, பூஜை, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி இசையிலும், செல்லபிராணிகளை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் உடையவர். பல்வேறு படங்களில் பின்னணி பாடல் பாடியிருக்கிறார். தனது அப்பா கமல்ஹாசனின் படமான ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தற்போது அவர் வனவிலங்கு பாதுகாப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டு WWF (World wildlife fund for nature) என்ற சர்வதேச தொண்டு அமைப்பானது தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது. இந்த அமைப்பு தற்போது 29 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கொள்கை வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக கூண்டில் அடைத்தல் மற்றும் சர்க்கஸ் போன்ற செயல்களில் ஈடுபடுத்தாமல் அவற்றை சுதந்திரமாக வனங்களில் விடுவது என்பதுதான். இந்த அமைப்பின் இந்திய தூதராக தற்போது ஸ்ருதி ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, நிறுவனத்தின் பணிகளை ஸ்ருதி ஹாசன் இனி இந்தியாவில் மேற்கொள்வார். மேலும் இந்த நிறுவனம் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, காலநிலை மாற்றம் போன்றவற்றிற்கு ஏற்றார் போன்ற செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.