விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள குக் வித் கோமாளி சீசன் 3 ல் இறுதிகட்ட பைனலில் பங்கு பெற போகபோறவர்கள் இந்த நான்கு பேர் தான்.
தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் விறுவிறுப்புடனும் நகைச்சுவை கலந்தும் நடைபெறும் குக்குவித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் ஓரு சமையல் தொடரை இவ்வளவு பெரிய அளவில் ஹீட் அடிக்க வைத்தவர்கள் கோமாளிகளாக பங்கு பெற்றவர்கள் என்றால் மிகையாகாது.
அனைவராலும் மகிழ்ந்து பார்க்கக் கூடிய தொடராக விஜய் டிவி வழங்கி வருகிறது. குக்வித் கோமாளி இதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குக்வித் கோமாளி சீசன் 3 பைனல் ஸ்டேஜிக்கு வந்துள்ளது.

10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாகா ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சில எலிமினேஷன்களை கடந்து புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரி என விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி சென்று வருகிறது.
முதல் பைனலிஸ்ட் ஆக ஸ்ருதிகா முன்னேறினார்.இதனை தொடர்ந்து இந்த வாரம் அரைஇறுதி போட்டி நடைபெற்றது.இதில் வெற்றி பெற்று அம்மு அபிராமி,வித்யூலேகா,தர்ஷன் உள்ளிட்டோர் பைனலுக்கு முன்னேறியுள்ளனர்.முத்துக்குமார் எலிமினேட் ஆகியுள்ளார்.பைனலிஸ்ட் ஆன நால்வருக்கும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அடுத்து நடைபெறும் வைல்ட்கார்ட் ரவுண்டில் ஒருவர் அல்லது இருவர் பைனலிஸ்ட் ஆக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.