பத்துதல: திரைக்கு வந்த ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியவர் ஒபிலி.என்.கிருஷ்ணா. இப்படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் இயக்கியுள்ள படம் ‘பத்துதல’. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானிசங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கன்னடத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இதில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் கடந்த 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளன்று ‘பத்துதல’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதிய ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. ‘அக்கரயில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்’ என்ற இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லை. கவுதம் கார்த்திக்குக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார்.