சிலம்பரசன்: சமீபத்தில் சிம்பு நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இதில் சிம்பு, ராதிகா, சித்தி இட்னானி ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிம்பு ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதில் இந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது மிகவும் முக்கியமானதும் கூட. ரசிகர்களுக்காகத்தான் நாங்கள் படத்தில் நடிக்கிறோம், அதை உருவாக்குகிறோம். இந்த நேரத்தில் நீங்கள் அடிக்கடி அப்டேட் கேட்பது சரியல்ல. உங்கள் ஆர்வம் எங்களுக்கு புரிகிறது. தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் அதிக சிரமங்களை எதிர் கொண்டு பணியாற்றும்போது ரசிகர்கள் அப்டேட் கேட்பதால் அவசரத்தில் சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்க வேண்டியதாகி விடுகிறது. உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களது முதல் வேலை.
அதற்கு நீங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படம் வரும். இதை நன்கு புரிந்து கொண்டு இனி அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாமல் இருங்கள். இவ்வாறு சிம்பு பேசினார். இப்படத்தை வெளியிட்ட நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டார்.