வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கதையை கூறிய இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன். ‘பெரிய விஷயம் பண்ணலைன்னா போயிடலாம். பெரிய விஷயம் பண்ணிட்டால் இங்கே இருக்கிறதுதான் பாதுகாப்பு’ன்னு இன்னொருத்தன் சொல்வான். இதுதான் இந்தக் கதை! – ஆனந்த விகடன் பேட்டியில் கெளதம் மேனன் ஓப்பன் டாக்.
கெளதம் வாசு தேவ மேனன் தமிழ் திரையுலகில் தனக்கென தனி வழியை பெற்றவர். இவரின் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி இயக்குனருக்கு ரசிகர்கள் இருப்பது ஓரு சில இயக்குனர்களுக்கு மட்டுமே.
சிலம்பரசன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு இயக்குனர் வாசுதேவ மேனன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தின் பாடல் அனைவருக்கும் பிடித்துள்ளது. செப்டம்பர் 15 ம் தேதி திரையங்கிற்கு வருவதாக தெரிகிறது.

அதற்கு நடுவில் இயக்குனர் மேனன் ஆனந்த விகடன் பேட்டியில் கதை களத்தை கூறி ரசிகர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார். ‘கேங்ஸ்டாரில் இருக்கும் இருத்தரை பத்தின கதை. அவன் எப்படி அதுகுள்ள போறான் அவன் வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கபோகுதுனு போகும். நாம் ஓரு வாழ்க்கை வாழுறோம் ஆனா இப்படியும் ஓரு வாழ்க்கை இருக்குனு எல்லோருக்கும் தெரியணும். வன்முறையை மிகைப்படுத்தாம வைச்சிருக்கேன்’.
நாளைக்கு உயிரோட இருப்போமானு தெரியல இதிலிருந்து வெளிய போயிடலாமானு ஓருத்தன் கேப்பான் பெரிய விஷயம் பண்ணலனா போயிடுவோம். பெரிய விஷயம் பண்ணிட்டோம்னா இங்க இருக்குறதுதா பாதுகாப்புனு இருந்துடுவோம்’ இது தான் கதை என ஆனந்த விகடன் பேட்டியில் கெளதம் வாசுதேவ மேனன் கூறியிருக்கிறார்.