புல்லட் சிம்பு: நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு. இவர் தான் நடித்த பல படங்களுக்கு பல பாடல்களை பாடி அசத்தியுள்ளார். சிம்பு மற்றும் யுவனின் கூட்டணியில் அமைந்த பாடல்கள் பெரும்பாலும் மாபெரும் வெற்றியடையும். மேலும் சிம்பு தன் படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார். சமீபத்தில் அவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகினருக்கும் பின்னணி பாடி வருகிறார். அந்த வகையில் அவர் அண்மையில் லிங்குசாமி இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியான ‘தி வாரியர்’ திரைப்படத்தில் ‘புல்லட்’ பாடலை பாடியிருந்தார். அந்த பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இப்பாடல் பயங்கர வைரலானது.
இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தெலுங்கில் மற்றுமொரு பாடலை பாடி இருக்கிறார். தேசிய விருது பெற்ற மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் இசையமைக்கும் ’18 பேஜஸ்’ என்ற தெலுங்கு படத்தில் ‘டைம் இவ்வு பில்லா’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. 18 பேஜஸ் திரைப்படத்தை பல்நட்டி சூரிய பிரதாப் இயக்கியுள்ளார். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 23ம் தேதி திரைக்கு வர உள்ளது. சிம்பு பாடியுள்ள அடுத்த தெலுங்கு பாடலுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.