மக்கள் பாதுகாப்பாக உணரும் நாடுகளில் சிங்கப்பூர் 96 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
இங்கு தண்டனைகள் கடுமையாக இருப்பதால் சிங்கப்பூர் மக்கள் தங்களை மிகவும் பாதுகாப்பானவர்களாக உணருகின்றனர். இந்த புள்ளி பட்டியலில் இந்தியா 80 புள்ளிகளுடன் 18 வது இடத்தை வகிக்கின்றது. இந்தியாவை காட்டிலும் 82 புள்ளிகள் பெற்று நம் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடம் பெற்று முன்னிலையில் உள்ளன. அதே போல அமெரிக்கா 83 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே சமயம் இங்கிலாந்து 79 புள்ளிகள் பெற்று இந்தியாவை காட்டிலும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அரசு சட்டத்திற்கு எதிராக செயல்படும் கயவர்களை தூக்கிலிட்டு தண்டனை வழங்குகின்றது.

சிங்கப்பூர் என்றாலே சிறப்பான ஊர் நம் கண்முன் வந்து செல்லும் அந்த சிங்கநீர் ஊற்று. அது போல தமிழர்கள் இங்கு அதிகளவில் வசித்து வருகின்றனர். வணிகமும் பலர் செய்து வருகின்றனர். தூய்மையான நகரமாகவும் சிறப்பான ஊதியம் வழங்கும் நாடாகவும் சிங்கப்பூர் இருந்து வருகின்றது.
ஜூலை மாதத்தில் ஓரு போதை பொருட்கள் கடத்தலுடன் தொடர்புடையவரை தூக்கிலிட்டது இந்த நாடு இது குறித்து மனித உரிமை ஆணையம் பேசியும் கூட மறுத்து தூக்கிலிடப்பட்டது.
தூக்கிலிடப்பட்ட மலேசியர் 32 வயதான கல்வந்த் சிங் என்பவர் ஆவார். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற வழக்கின் முடிவில் கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்.
கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் முன்பு கடந்த புதன்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது. கல்வந்த் சிங்கை தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்ற அதே வேளையில், அவரைக் காப்பாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மக்கள் பாதுகாப்பாக உணரும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்து அம்மக்களின் பேராதரவை பெற்று திகழ்கிறது.