சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகும் நிலையில் அதனை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் கொண்டாடி வருகிறது. ரஜினி நடித்த காட்சிகளையும் AVM நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களின் ஆராவாரத்தை பெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி பட்டித் தொட்டி எங்கும் வெற்றி விழாவாக பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது வசூலையும் அள்ளி குவித்தது ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். இதல் வரும் டைலாக்குகள் இன்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.

ரஜினிகாந்த் தனது திரை பயணத்தை 1975 ல் கே.பாலசந்தர் மூலம் அபூர்வ ராகங்கள் படத்தில் முதன் முதலாக நடிக்க வைத்தார். தற்போது அவருக்கு 71 வயதாகிறது இன்றும் இளசுகளுடன் போட்டி போட்டு நடிக்கிறார். அவரை பற்றி பேசும் போது ஓரு டைலாக் நியாபகம் வருகிறது. ‘படையப்பா வயசானலும் நீயும் உன் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல’
பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், மறைந்த நடிகர் விவேக், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, கொச்சின் ஹனீபா, பிரமிட் நடராஜன், லிவிங்ஸ்டன், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலரின் நடிப்பில் உருவானப் படம் ‘சிவாஜி’. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கடந்த 2007-ம் ஆண்டு, ஜுன் மாதம் 15-ம் தேதி இந்தியாவிலும், அதற்கு ஒருநாள் முன்னதாக வெளிநாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.
தொழிலதிபராகவும் தெலுங்கு நடிகரான சுமன் படத்தில் மிரட்டியிருப்பார். வாலி, வைரமுத்து, நா.முத்துகுமார், பா.விஜய் ஆகியோரின் பாடல் வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தோட்டாதரணியின் கலை இயக்கத்தில், கே.வி. ஆனந்தின் ஒளிப்பதிவில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
முக்கியமாக ‘பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிலா தா வரும்’ என்ற டைலாக் மக்களிடையே மிக பிரபலம். மேலும், சிங்க பாதை , ஓரு ரூபாய் என்ற பஞ்ச் டைலாக்குகள் வசனங்கள் என அனைத்தும் பெரும் வரவேற்பு பெற்றன. டைரைக்டர் சங்கருடன் ரஜினி இணைந்த முதல் படமாகவும் இப்படம் உள்ளது.
இப்படத்தை இப்போது ரஜினி ரசிகர்கள் 15 ஆண்டுகள் ஆனதை ஓட்டி சமூக கொண்டாடி வருகின்றனர். வில்லனாக நடித்த சுமன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் என பலரும் இப்படம் குறித்த தன் அனுபவங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.
ரஜினி பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இந்திய நாட்டின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் வாங்கியுள்ளார்.