சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கு மாவீரன் என பெயர் சூட்டப்பட்டது

0
12

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கு மாவீரன் என பெயர் சூட்டப்பட்டது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் மிம்மிக்கிரி செய்து விஜய் டிவியில்அசத்துவார். பின் காம்பேயராகவும் வந்து காமெடி செய்வார். தமிழ்த் திரையுலகத்திற்கு மெரினா என்ற திரைப்படம் மூலம் கால் பதித்தார். இன்று ஓரு நல்ல நடிகராகவும் முன்னனி நடிகராகவும் உயர்ந்து அனைவரது வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் டான் திரைப்படம் ஓரு நல்ல குடும்பங்கள் ஆதரிக்கும் படமாக இருந்து அனைவரையும் கவர்ந்தது. நல்ல வெற்றியும் பெற்றது இதனை தொடர்ந்து பிரின்ஸ் படத்திற்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 22 வது படத்திற்கான டைட்டில் மாவீரன் என்றும் அப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டரையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கு மாவீரன் என பெயர் சூட்டப்பட்டது

பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன்னே அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மாவீரன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்திற்கான அறிவிப்பை ஜூன் 28-ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் அறிவிக்கவில்லை. அதேபோல் ஜூலை 8-ம் தேதி அறிவிப்புடன் படத்தை தொடங்குவது என முடிவெடுத்தனர். அந்த தேதியிலும் அறிவிக்க முடியவில்லை. இதற்காக சில காரணங்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில் இன்று கலை 10.10 மணிக்கு மாவீரன் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். இதற்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. மாவீரன் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here