சிவகார்த்திகேயன் நடித்த PRINCE படத்தின் நேரம் குறைப்பு

0
12

சிவகார்த்திகேயன் நடித்த PRINCE படத்தின் நேரம் குறைப்பு. இந்தாண்டு தீபாவளியை முன்னனிட்டு வெளியாக உள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான ப்ரின்ஸ் திரைப்படத்தின் முழுநீள நேரம் குறைத்தது படக்குழு.

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று தன்க்கே உரிய நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திருப்பவர் எஸ்கே. டிவி நிகழ்ச்சிகளில் தன் திறமையான நகைச்சுவையால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் எனவே இவருக்கு மிகப் பெரும் அறிமுகம் தேவையில்லை.

முதன் முதலாக சினிமாவிற்கு மெரினா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து பல நல்ல படங்களை தந்ததால் இவரின் மார்க்கெட் சரியாமல் இருக்கின்றது. இவர் இறுதியாக நடித்த படம் டான் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் 100 கோடி அளவில் தாண்டி சினிமாவில் சாதனை படைத்தது.

சிவகார்த்திகேயன் நடித்த PRINCE படத்தின் நேரம் குறைப்பு

இவர் தற்போது, நடித்து தீபாவளிக்கு வெளியாகும் படம் ப்ரின்ஸ் இந்த படத்தை அனுதீப் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகின்றது. இப்படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு அழகி மரியா மற்றும் சத்யாராஜ், ப்ரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தீபாவளி வெளியாக வேண்டிய படங்கள் அனைத்தும் ஓரிரு நாட்கள் முன்னதாகவே திரையிட முடிவு செய்யப்பட்டு நாளை ரீலிஸ் ஆகின்றது. கார்த்தி நடிக்கும் சர்தாரும் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது.

நாளை வெளியாகும் ப்ரின்ஸ் திரைப்படத்தின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் 12 நிமிடங்கள் குறைத்து 2 மணி நேரம் 11 நிமிடங்கள் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் நல்ல வெற்றி படமாக அமையும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

என் படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதன் முறை. இதற்கு அடுத்து அஸ்வின் மடோன் இயக்கும் ‘மாவீரன்’ ஷூட்டிங் நடைபெற்று வருகின்றது.  பிறகு ‘அயலான்’. அடுத்து கமல் சாரோட ராஜ்கமல் தயாரிப்புல ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என நீள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here