சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ரீலிஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகிற்கு சிவகார்த்திகேயன் வருவதற்கு முன்னர் பல டிவி சேனல்களில் காமெடி செய்து கொண்டும் மிம்மிக்கிரி செய்து கொண்டும் இருந்து வந்தார். தன் திறைமையை வளர்த்து கொண்டு இன்று கதாநாயகனாக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்களில் ஓருவராக வந்து பல வெற்றி படங்களையும் தந்து கொண்டுள்ளார் என்றால் மிகையாகாது.

ஆரம்ப காலத்தில் திரையில் மெரினா போன்ற சிறிய படங்களில் நடித்து வந்த SK வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றியை தந்து அவரை பெரிய அளவில் ரசிகர்களிடம் சேர்த்தது. அப்படம் மிகப்பெரும் வெற்றி படமாகவும் நல்ல காமெடி படமாகவும் அமைந்து வசூலிலும் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
டாக்டர், டான் என தொடர்ந்து வெற்றி படங்களை தந்து கொண்டு உள்ள சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்குகின்றார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு மரியா அப்படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்துள்ளார். மேலும், சத்யராஜ் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர்களின் பாடல் ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு தமண் இசையமைக்கிறார். இந்நிலையில் படம் அக்டோபர் 21ம் தேதி ரிலீசாக உள்ளதாக இயக்குநர் அனுதீப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் சிறப்பான மார்க்கெட் உள்ள நிலையில் அங்கு இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.