சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

0
14

சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படம்.

நேற்று மாலை புதுடெல்லியில் 68வது தேசிய திரைப்படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பல மொழிவாரியான படங்கள் பங்கு கொண்டன.30 மொழிகளில் இருந்தும் 296 படங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டது. இவற்றில் பல படங்கள் விருதுகளை குவித்தது.

சிறந்த நடிகர்கள் விருது, சிறந்த இசையமையப்பாளர் விருது, குணச்சித்திரர் விருது, பாடகர் விருது, துணை நடிகர்க்கான விருது, சிறந்த படத்தொகுப்பு விருது, சிறந்த கதைக்கான விருது என பல விருதுகள் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த் திரைப்படங்கள் மொத்தமாக 10 விருதுகளை வாங்கியது. இந்நிலையில், சிறந்த தமிழ் படத்திற்கான விருதை இயக்குனர் வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர்26-ம்தேதி வெளியான இந்த திரைப்படம், 3 பெண்களின் கதையை ஆந்தாலஜி ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கும். இவர்களின் வழியே சமூகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்னைகளை பேசும் வகையில் படத்தை இயக்குனர் வசந்த் அமைத்திருப்பார்.

யதார்த்த சினிமா மூலம் பெண்களின் பிரச்னையை பேசும் இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும், இன்னும் சில பெண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அதிகளவிலான தேசிய விருதுகளை வாங்கி குவித்த தென்னிந்திய மாநிலங்கள்

கதை, திரைக்கதை உள்ளிட்டவை சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜாவின் இசை கூடுதல் பலம் சேர்த்தது.

இந்த படத்தில் சிவரஞ்சனியாக லட்சுமி பிரியா சந்திரமவுலி, தேவகியாக பார்வதி மேனன், சரஸ்வதியா காளீஸ்வரி சீனிவாசன், சந்திரனாக கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

ஹம்சா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்திருந்தார். விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் அடுத்ததாக தேசிய விருதைப் பெறவுள்ளது.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தவிர்த்து, சிறந்த எடிட்டிங்கிற்காக இந்த படத்தில் பணியாற்றி ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சிறந்த துணை நடிகைக்காக லட்சுமி பிரியா சந்திரமவுலி ஆகியோருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 விருதுகளை அள்ளியுள்ளது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.

மேலும், சினிமா படப்பிடிப்புகளுக்கு உகந்த மாநிலமாக மத்திய பிரதேசத்தை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here