மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா புதிய கதைதளத்தில் களம் காண இருக்கின்றார். SJ SURIYA பன்முக திறமையால் தமிழ் சினிமாவில் தன்க்கென இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய முதல் திரைப்படம் நடிகர் அஜித்குமாரை வைத்து எடுக்கப்பட்ட வாலி திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது.
அதன் பிறகு, விஜய் நடிப்பில் குஷி, நீயு, அன்பே அரூயிரே படத்தை இயக்கி நடிகராகவும் களம் கண்டார். இப்படத்தில் வரும் ஓரு டைலாக் இன்றளவும் சூப்பர் டூப்பர் ஹிட் இருக்கு ஆனா இல்ல என்ற டைலாக். பின் 2015ம் ஆண்டு இறுதியாக இவர் இயக்கியும் நடித்து உருவான படம் இசை.
நடிகராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் இருந்த இவரின் வில்லன் கதாபாத்திரம் பெரும் அளவில் வெற்றி பெறவே இவரை வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிக்க வைத்தனர். இவர் வில்லனாக நடித்த மெர்சல், மாநாடு படங்கள் பெரும் அளவில் வெற்றி பெற்று வசூலிலும் வெற்றி கண்டது.

தற்பொழுது, மார்க் ஆண்டனி, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படம் உட்பட சில படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் நடித்து முடித்து விட்டு தான் இயக்கவுள்ள கில்லர் என்ற படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கவும் உள்ளார். இப்படம் பெரிய அளவில் பொருட் செலவில் உருவாகும் படமாகவும் உருவாகின்றது.
இந்த தகவல் குறித்து எந்த ஓரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. பொங்கலுக்கு பிறகு இப்படத்தின் பணிகள் நடைபெறும் என தெரிகின்றது. அதன்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.