இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ் சேவை தொடங்கப்படும்-நிதின்கட்காரி

0
3

இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ் சேவை தொடங்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்கள் பயணம் செய்ய பல இன்னலுக்கு உள்ளாகின்றனர். நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பல நகரங்களில் மக்கள் கூட்டம் ஓரே நேரத்தில் பயணம் மேற்கொள்வதாலும் விரைவின் காரணமாகவும் இன்னல்கள் ஏற்படுகிறது.

இதற்கேற்ப பல திட்டங்களின் வாயிலாக அதனை சரிசெய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் நான்கு வழிச்சாலை எட்டி வழிச்சாலை என பல திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. பேருந்து மற்றும் ரயில் சேவைகளையும் அதிகரித்து வருகிறது அரசு. காலமாற்றத்திற்கேற்ப மெட்ரோ உருவாகியது இப்போது ஸ்கைபஸ் (பறக்கும் பேருந்துகளை) கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ் சேவை தொடங்கப்படும்-நிதின்கட்காரி

ஸ்கைபஸ் என்பது மெட்ரோ போலவே இருக்கும் ஓரு ரயில்வே அமைப்பாகும். இதில் சுமார் மணிக்கு 100 மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். எரிப்பொருளுக்கு மாற்றாக மின்சாரத்தைப் பயன்படுத்தலாம்.

டெல்லி மற்றும் ஹரியானாவில் முதற்கட்டமாக கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதனால் காற்றுமாசு குறையும் என்றும் மக்கள் தங்கள் பணிகளை விரைவாக செய்லாம் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் விரைவில் ஸ்கைபஸ் பேருந்து சேவை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here