தற்போது உள்ள நிலவரப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் தாெடர்ந்து செல்போன், கம்ப்யூட்டர் பார்ப்பது போன்றவைகளும் தலைவலிக்கு காரணமாக உள்ளன. இதை தவிர்க்கவும் தலைவலியை குறைக்கவும் சில டிப்ஸ்கள்.
- ஐந்தாறு துளசி இலைகள், ஒரு சிறு துண்டு சுக்கு, இரண்டு இலவங்கம் சேர்த்து மை போல அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கடுமையான தலைவலி காணாமல் போய்விடும்.
- விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கில் உறிஞ்ச தலைவலி உடனே நீங்கி விடும்.
- நெற்றியில் குப்பை மேனிச் சாறு தடவ தலைவலி குணமாகும்.
- தாய்ப்பாலில் சிறிதளவு சுக்கை அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி தானாகவே தனிந்துவிடும்.
- ஸ்ட்ராங் டீ அல்லது காபியில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து குடித்தால் தலைவலி குறையும்.
- திருநீற்றுப் பச்சிலைச் சாறையும், தும்பைச் சாறையும் கலந்து பச்சைக் கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைபாரம் இறங்கி தலைவலி குணமாகும்.
- வெள்ளரிக்காய் துண்டில் சிலவற்றை வைத்து தீயில் சுட்டு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.
- கடுகை நன்றாக அரைத்து நெற்றியிலும் பி்ன் கால் பாதத்தின் கீழ் பகுதியிலும் பூசினால் தலைவலி நீங்கும்.
- புதினாவை அரைத்து துணியில் தடவி அந்த துணியை நெற்றியில் போட்டால் தலைவலி குறையும்.
- ஜாதிமல்லி இலையுடன் சிறிது சுக்கு, சிறிதளவு பசும்பால் சேர்த்து அரைத்து நெற்றி கன்னம் பகுதிகளில் தடவி லேசான நெருப்பில் காண்பிக்க தலைவலி ஓடிவிடும்.
- புளிப்பான ஆப்பிளை உப்பு சேர்த்து அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் கடும் தலைவலி கட்டுப்படும்.
- கற்பூரவல்லி இலையை நன்கு கழுவி அதை கசக்கி சாறு பிழிந்து அதில் 1 அவுன்ஸ் வீதம் காலை, மாலை என 1 வேளை சாப்பிட்டாலே போதும். தலை பாரம் உடனே கழிந்து தலைவலி பூரணமாக குறையும்.