சிவகார்த்திகேயன்: பல தமிழ் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த சூரி பிறகு படம் முழுவதும் அவரது ஆக்கிரமிப்பை கொண்டு வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். காமெடி வேடத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுப்படம் ஒன்றை இயக்குனர் வினோத் ராஜ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வினோத் ராஜ் ஏற்கனவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ‘பெப்பில்ஸ்’ என்ற படத்தை இயக்கியவர். இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. அவர் தற்போது இயக்கும் ‘கொட்டுக்காளி’ படத்தில் நாயகனாக சூரியும், நாயகியாக மலையாள நடிகை அன்னாபென்னும் நடிக்கின்றனர்.
நடிகை அன்னாபென் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹிட்டான ‘ஹெலன்’ என்ற படத்தின் நாயகி இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சக்திவேல் ஒளிப்பதிவில் கணேஷ் சிவா படதொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.