‘இந்தி திணிப்பு’ கடுமையாக எச்சரிக்கும் தலைவர்கள்

0
48

இந்தி திணிப்பு –க்கு எதிராக இன்றல்ல நேற்றல்ல பல காலமாக போராட்டங்கள் நிகழ்நது கொண்டே தான் இருக்கிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். ஆங்கில மொழிக்கு மாற்று மொழி இந்தி தான் ஆதலால் இந்தி பேசாத மாநிலத்தவர்கள் ஆங்கில மொக்கு மாற்றாக இந்தியை தான் பேச வேண்டும். இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக மாற்றும் தருணம் வந்து விட்டது என மத்திய இணை அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.

இந்தி திணிப்பு கடுமையாக எச்சரிக்கும் தலைவர்கள்

இவ்வாறு பேசிய அமித்ஷா விற்கு கண்டனங்களும் எதிர்ப்புகளும் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. பல மாநில தலைவர்களும் அரசியல் தலைவர்களும் அவரரவர் எதிர்ப்பினை தெரிவித்துக் கொண்டே உள்ளனர்.

இந்தி திணிப்பு – தலைவர்களின் எதிர்ப்புகள்

  • இந்தி தேசிய மொழி அல்ல. அதை மக்களிடம் திணிக்க முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கர்நாடக முன்னால் முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு - தலைவர்களின் எதிர்ப்புகள்

  • ”ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஓன்றிய உள்துறை அமைச்சர் சொல்வது இந்தியாவின் ஓற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொர்ந்து செய்கிறது.
  • ‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று நினைக்கிறாரா? ஓற்றை மொழி என்பது ஓற்றுமைக்கு உதவாது! ஓற்றுமைத் தன்மை என்பது ஓருமைபாட்டையும் உருவாக்காது! ஓரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.
  • இந்தியாவின் இணைப்பு மொழியாகும் தகுதி தமிழுக்குத்தான் உண்டு. இந்திக்குக் கிடையாது. இருந்தாலும் மொழித் திணிப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்தி திணிப்புக்கு எதிராக இசை புயல் ஏ. ஆர். ரகுமான் தன் எதிர்ப்பை கடுமையான கோபத்துடன் சூலத்தை தூக்கி தலைவிரி கோலத்துடன் நடனம் ஆடு பெண்  போன்று அந்த சூலத்தின் நுனியில் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பெழுத்தான ” ழ” கரத்தினை தாங்கி ஆடுவது போல ஓரு ஓவியத்தை தன் இன்சஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த ஒவியத்திற்கு கீழே பாரதிதாசன் எழுதிய “இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ளது.

இந்தி திணிப்பு - தலைவர்களின் எதிர்ப்புகள்

  • கவிஞர் வைரமுத்து தன் எதிர்ப்பை தன் க‍விதையாலே கூறியுள்ளார்.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமானது 1937 லிருந்தே நிகழ்ந்து வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிரான மாநாடுகளும் நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here