ஐரோப்பா: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆரோக்கியமாக சாப்பிட்டால் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் தேவை என்று டாக்டரகள் எப்போதும் அறிவுறுத்துவது வழக்கம். ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. இதை நடைமுறைக்கு கொண்டு வர ஐரோப்பாவின் ரோமானியா நாட்டில் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வகையில் ஒரு புதுமையான நடைமுறை செயல் படுத்தப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால் பேருந்தில் செல்ல இலவச டிக்கெட் வேண்டுமென்றால் டிக்கெட் மிஷின் முன்பு கட்டாயம் 2 நிமிடத்தில் 20 தோப்புக்கரணம் போட வேண்டுமாம். அப்படி 20 முறை செய்தால் இலவச டிக்கெட்டை பெற முடியும். இதில் தில்லு முல்லு ஏதும் செய்ய முடியாது, ஏனென்றால் அந்த மிஷினில் கேமரா பொறுத்தப்பட்டிருக்கிறது. அதன் வழியாக தோப்புக்கரணம் போடுவோரை கண்காணித்து சரியாக 20 முறை தோப்புக்கரணம் போட்டு முடிக்கும் நபருக்கு ஆட்டோமெட்டிக்காக பஸ் டிக்கெட்டை மிஷின் வழங்கிவிடும். இந்த நடைமுறை ரோமானியாவின் க்ளூக் நபோகா என்ற நகரில் பயனன்பாட்டில் உள்ளது. இதை தவிர் இந்த நகரின் பல பகுதிகளில் சைக்கிளிங் செய்வதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருக்கும் டிக்கெட் மிஷின் முன்பு இருக்கும் நிலையான சைக்கிளில் 400 மீட்டருக்கு சைக்கிளை மிதித்தால் இலவச டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். பைசா செலவில்லாமல் மக்களின் உடல் நலனை பேணிகாக்கும் இந்த நாட்டின் இந்த ஐடியா பலரையும் கவர்ந்து வருகிறது. இணையத்தில் வெளியான இந்த வீடியோக்கள் தற்போது 20 லட்சத்துக்கும் மேலானோரை கவர்ந்திருக்கிறது.