ஜான்வி கபூர்: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். அவரதை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயன்றனர். அதேபோல் தெலுங்கு இயக்குனர்களும் கேட்டனர். ஆனால் தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஜான்வி மறுத்து வந்தார். இந்நிலையில் தொடர் முயற்சிகளுக்கு பிறகு ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்க அவர் சம்மதித்துள்ளார். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‘ஜனதா கேரேஜ்’ படத்தை இயக்கியிருந்தார்.
இப்போது கொரட்டாலா சிவா இயக்கி ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா தயாரிக்கின்றனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபு சிரில் கையாள்கிறார். நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 5, 2024ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. பான் இந்தியா படமாக இதை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.