ஸ்ரீஹரிக்கோட்டா: PSLV C- 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்தது

0
16

ஸ்ரீஹரிக்கோட்டா: ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 9 செயற்கைகோல்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணை நோக்கி பாய்தது.

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை வடிவமைக்கிறது. அவற்றை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் விண்ணில் நிறுத்தி வருகிறது.

விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. – சி 54 ராக்கெட், இன்று காலை விண்ணில் பாய்ந்தது. இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு பி.எஸ்.எல்.வி. சி–54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிக்கோட்டா: PSLV C- 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்தது

இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட ‘ஓசன்சாட்–03′ (இ.ஓ.எஸ்–06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோளை சுமந்து சென்றது. இது ஓசோன்சாட் வரிசையில் அனுப்பப்படும் 4–வது ஆய்வு கலமாகும்.

கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை அளிக்கும்.

மேலும் 8 நானோ செயற்கைகோள்களையும் இந்த ராக்கெட் சுமந்து சென்றது. அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட் – 2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன.

பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: சவூதி வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட உள்ளது

இன்று 56-வது முறையாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அதோடு இந்த ஆண்டில் 5-வது மற்றும் கடைசி முறையாக இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here