பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலின் சித்திரை தேரோட்ட திருவிழா நாளை ஏப் 29 ல் நடக்கிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முதலாவதாக காணப்படும் தலம் திருவரங்கம்.
திருச்சி ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலின் சித்திரை தேர்திருவிழா ஏப்ரல் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. ஆண்டு முழுவதும் நாள்தோறும் சிறப்பான பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதனையொட்டி மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமான் அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு 3.00 மணியளவில் கொடி மர மண்டபத்தை வந்தடைந்தார். பின் அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமான் கண்ணாடி அறையை அடைந்தார்.
பின்னர் மாலை 6.30 மணிக்குநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்று அடைந்தார்.தினமும் காலை மாலையில் நம்பெருமான் வேறு வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏப்ரல் 27 ல் முக்கிய நிகழ்வுகளில் ஓன்றான நெல்லளவு கண்டு அருளினார்.

28 ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபம் வந்து சேருகிறார்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையைக்கு செல்கிறார்.
சித்திரை தேரொட்ட விழாவில் முக்கிய நாளாகிய தேரொட்டம் ஏப் 29 நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனையடுத்து நம்பெருமான் கண்ணாடி அறையிலிருந்து 4.45 மணிக்கு புறப்பட்டு 5.15 க்கு சித்திர மண்டபம் வந்தடைகிறார். அதனை தொடர்ந்து 5.30 மணியிலிருந்து 6.15 க்குள் தேரில் எழுந்து அருளுகின்றார். பின் மக்களின் கரங்கள் வழியாக தேரானது இழுக்கப்பட்டு நான்கு மாட வீதிகளிலும் சென்று அங்குள்ள பக்தர்களுக்கு தன் இன்முகத்தை காட்டி அருள் புரிந்து தேர் நிலையை வந்து அடையும்.
இந்நிகழ்வினை ஓட்டி தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் பக்தர்கள் அனைவருக்கும் குடிதண்ணீர் மற்றும் பிரசாதங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றது. தேரொட்டத்தை முன்னிட்டு மக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கோயில் நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மறுதினமான சனிக்கிழமை அன்று இரவு சப்தவாரணம் நிகழ்வினை தொடர்ந்து தேரொட்டத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படும். அதன்பின் 1ம் தேதி இரவு ஆளும்பல்லக்குடன் தேர் திருவழா நிறைவு பெறும்.