ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் ஆடிப்பூர தேரோட்டம் விமர்சையாக நடந்தது

0
9

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் ஆடிப்பூர தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவின் கொடியேற்றம் ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 28ஆம் தேதி கருட சேவை நிகழ்ச்சியும் 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற்றது.

விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1ஆம் தேதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்து. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் ஆடிப்பூர தேரோட்டம் விமர்சையாக நடந்தது

அதன்படி இன்று ஆடிப்பூர தேரொட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தின் காரணமாக விமர்சையாக விழாக்கள் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. சைவ ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் ஆடிப்பூரம் நாளில்தான் கொண்டாடப்படும். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் சிவ ஆலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவார்கள்.

கருவூற்றிருக்கும் தாய்மார்கள் இறைவனை வேண்டி தனக்கும் விரைவில் வளைகாப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் நல்ல முறையில் பிரசவம் நடைபெற வேண்டும் என்றும் வேண்டி கொண்டு வழிபடுவார்கள்.

ஆடிப்பூரம் நாளில்தான் ஆண்டாள் அவதரித்தார் என்பது நம்பிக்கை. ஆண்டாள் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here