ஸ்பீல்பெர்க்: ராஜமெளலியின் பீரியட் படமான ஆர்.ஆர்.ஆர். தற்போது உலக அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஜனவரி 11ம் தேதி ரிஹானா, லேடி காகா மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் போன்றவர்களைத் தோற்கடித்து ‘சிறந்த அசல் பாடலுக்கான’ கோல்டன் குளோப் விருதைப் பெற்று வரலாறு படைத்தது ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்.
தற்போது திரைப்பட இயக்குனர் ராஜமெளலி பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியும் உள்ளார். ‘நான் கடவுளை சந்தித்தேன்’ என தலைப்பிட்டு ஸ்பீல்பெர்க்குடனான படத்தைப் பகிர்ந்துள்ளார் ராஜமெளலி.
மறுபுறம் ஸ்பீல்பெர்க்குடனான படத்தை டிவிட்டரில் பகிர்ந்து இசையமைப்பாளர் கீரவாணி, ‘திரைப்படங்களின் கடவுளைச் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய காதுகளில் டூயல் உள்ளிட்ட அவரது திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறினேன். மேலும் நாட்டு நாட்டு பாடல் எனக்கு பிடிக்கும் என்று அவர் கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.