சர்வதேச பட நிறுவனங்களுடன் கைகோர்க்கும் இயக்குனர் ராஜமவுலி

0
8

ராஜமவுலி: இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றன. இதில் பாகுபலி 2, ஆர் ஆர் ஆர் படங்கள் உலகம் முழுவதிலும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை புரிந்தது. இந்நிலையில் ராஜமவுலி இயக்க இருக்கும் அடுத்த படத்துக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

international film production companies joined with rajamouli

ராஜமவுலி அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் தான் படம் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. அமேசான் காடுகளில் படமாகும் இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷ்ன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜமவுலி இயக்கும் படத்திற்கு சர்வதேச அளவில் மாபெரும் வரவேற்பு உள்ளதால் அவர் இயக்கும் படத்தின் தயாரிப்பில் சர்வதேச பட நிறுவனங்களான குளோபல் ஸ்டுடியோ மற்றும் டிஸ்னி ஆகிய நிறுவனங்கள் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றன. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here