ஆஸ்கர், குளோடன் குளோப் போன்ற உயரிய விருதுகளில் நாமினேஷனில் வரிசை கட்டும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்

0
7

ராஜமவுலி: இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் Pan India படமாக வெளியானது. ஆனால் தற்போது இந்த படம் Pan world படமாக மாறியிருக்கிறது. இப்படம் வெளியாகி உலகம் முழுவதம் 1200 கோடியும், இந்தியாவில் மட்டும் 900 கோடியும் வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அங்கயும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இது வரை ஜப்பானில் ரஜினியின் ‘முத்து’ படம் தான் அதிக வசூல் ஈட்டிய இந்திய படமாக இருந்தது. ஆனால் அந்த சாதனையை ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது.

இப்படி இருக்கையில் சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் இரண்டு பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத படமாக உருவெடுத்திருக்கிறது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர். மேலும் Newyork Film critics circle, Hollywood critic association spotlight award, National board of review என இன்னும் பல சர்வதேச விருதுகளை குவித்து உலக சினிமாவையே அன்னாந்து பார்க்க வைத்திருக்கிறது ஆர்ஆர்ஆர்.

இவற்றையெல்லாம் தாண்டி உலகின் மிகப்பெரிய சினிமா விருதான ஆஸ்கர் விருதினை வெல்லும் முதல் இந்திய திரைப்படமாக இருக்கும் அதிகப்படியான வாய்ப்பினையும் ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. இதற்கு முன்பு பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்களின் மூலம் இந்திய சினிமாவை மிரள வைத்த ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலக சினிமாவையே பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Rajamouli's RRR movie nominated for internaitional awards

இதனிடையே கடந்த ஒரு வாரத்தில் ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலை காண்போம்.

1.Golden Globe – சிறந்த திரைப்படம் (Non-English), சிறந்த பாடல் (நாட்டு கூத்து)

2. Critics Choice – சிறந்த திரைப்படம், சிறந்த VFX, சிறந்த திரைப்படம் (Non-english), சிறந்த இயக்குனர், சிறந்த பாடல்

3. HCA Film Awards – சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம், சிறந்த ஆக்ஷன், சிறந்த சர்வதேச திரைப்படம்

ஆகிய பட்டியலில் ஆர்ஆர்ஆர் படம் பரிந்துரையில் இடம்பெற்றள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here