லத்தி பட வருவாயில் மாணவர்கள் விவசாயிகளுக்கு செலவு-விஷால்

0
8

லத்தி திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள நிலையில் லத்தி திரைப்படத்தின் டிக்கெட் விற்பனையில் ஓரு ரூபாயை எடுத்து மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு செலவு செய்ய உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘வீரமே வாகை சூடும்’. படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது, அறிமுக இயக்குனர் வினோத் குமார் லத்தி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலும் யுவன் ஷங்கர் இசையில் இணைந்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் நாளை 22ந் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு போன்ற 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திராவில் உள்ள திருப்பதியில் தனியார் நிகழ்ச்சியில் சென்ற விஷால் ‘லத்தி’ திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தலா ஒரு ரூபாயை மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செலவு செய்ய உள்ளதாக நடிகர் விஷால் உறுதியளித்துள்ளார்.

லத்தி பட வருவாயில் மாணவர்கள் விவசாயிகளுக்கு செலவு-விஷால்

ரமணா மற்றும் நந்தாவின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எம் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் யுவன், விஷாலுடன் இந்தப் படத்தின் மூலம் 12-வது முறையாக இணைந்துள்ளார். படத்திற்கு பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.

இப்படம் திரையரங்கிற்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை வெளியாகிறது. இதனை விஷாலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: BIGG BOSS 6 : இந்த வார டாஸ்க்கில் அனைவரையும் கவர்ந்த பிபி வீடு

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here