நியூசிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 112 ரன்களை அடித்ததன் மூலம் பாபர் அசாமின் சாதனையை சமன் செய்தார் இந்திய இளம் வீரர் சுப்மன் கில்.
இந்தியாவிற்கு மூன்று ஓருநாள் தொடர் மற்றும் மூன்று டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க வந்துள்ள நியூலாந்து அணி மூன்று ஓருநாள் தொடரிலும் பங்கு பெற்று தோல்வியை சந்தித்தது. முதல் ஓருநாள் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் ஓப்பனர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இளம் வயதில் (23) இரட்டை சதம் அடித்து 208 சாதனை படைத்தார்.
தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 40 ரன்களை எடுத்திருந்தார். இதனை அடுத்து மூன்றாவது போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்திய சுப்மன் கில் 112 ரன்களை எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை சமன் செய்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஓரே தொடரில் மூன்று போட்டிகளில் 360 ரன்களை எடுத்திருந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. இதனை சுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளில் 360 ரன்களை எடுத்த நிலையில் பாபர் அசாமின் சாதனையை சமன் செய்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து வங்காளதேச வீரர் இம்ரல் கயீஸ் (349), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (342), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (330) ஆகியோர் உள்ளனர்.
மேலும் ஓரு ரன் அதிகமாக எடுத்திருந்தால் பாபர் அசாமின் சாதனையை முறியடித்து முன்னிலையில் சென்றிருப்பார். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான இந்திய அணியின் கேப்டன் ரோஹூத் சர்மா மற்றும் சுப்மன் கில் இணைந்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு தந்தனர். இருவரும் சதம் கடந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர்.
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 385 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடினமான இலக்கை எட்ட முடியாமல் நியூலாந்து அணி 295க்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிக் கொடுத்தது.
இதையும் படியுங்கள்: சபரிமலைக்கு பெண்கள் அனுமதி குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு
இந்த தொடர் மூலம் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு சென்றது. 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.