சங்கமித்ரா: கைவிடப்பட்ட இருந்த ‘சங்கமித்ரா’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த படம் ‘சங்கமித்ரா’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்கான தொடக்க விழாவும் நடந்தது. இந்நிலையில் பட்ஜெட் பிர்ச்சினை காரணமாக படம் கைவிடப்பட்டது. இது சரித்திர கதை படமாகும்.
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர படம் வெளியாகி ஹிட்டானது. இதனால் உற்சாகம் அடைந்த இgl;ந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் மீண்டும் ஒரு சரித்திர படம் எடுக்க விரும்புகிறது. இதனால் கைவிடப்பட்ட ‘சங்கமித்ரா’ படத்தை மீண்டும் தொடங்க லைகா திட்டமிட்டுள்ளது. அதே சமயம் இந்த படத்திலிருந்து ஜெயம் ரவி விலகிவிட்டார். அவருக்கு பதிலாக விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு இந்த வேடம் பொருந்தாது என விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அவருக்கு பதிலாக பூஜா ஹெக்டே இதில் தேர்வாகியுள்ளார். அவருக்கு ரூ.4.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.