விஜய் டிவி புகழ் பாடகி ராஜலட்சுமி படத்தின் ஹீரோயின் ஆனார்.

0
34

ராஜலட்சுமி: நாட்டுப்புற பாடகர்களான ராஜலட்சுமி, செந்தில் கணேஷ் ஜோடி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள். பின்னர் இவர்கள் திரைப்படத்தில் பின்னணி பாடர்களாக மாறினர். பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்2’ படத்தில் இவர்கள் பாடிய ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. தொடர்ந்து இவர்கள் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் ‘கத்தரி பூவழகி’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் ‘டங்கா டங்கா’ உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளனர். கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ராஜலட்சுமி பாடிய ‘சாமி சாமி’ பாடல் மேலும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு போனது. அதைத் தவிர சில ஆல்பங்களிலும் பாடி ஆடியிருக்கிறார் பாடகி ராஜலட்சுமி.

singer rajalakshmi acting heroine in new movie

இந்நிலையில் ராஜலட்சுமி சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நார்மல் பிலிம் பேக்டரி சார்பில் இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கும் ‘லைசென்ஸ்’ என்ற படத்தில் ராஜலட்சுமி கதையின் நாயகியாக நடிக்கிறார். இதில் விஜய் பாரத், ராதாரவி, மதுரை ரிஷி, பேபி அதிதி பாலமுருகன், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கவுண்டமணி நடிப்பில் வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தந்தை, மகள் பாசத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here