ரஜினிகாந்த்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்தும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் நேற்று இரவு திருமைலக்கு வந்தனர். திருமலையில் உள்ள டிஎஸ்ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு இருவரும் தங்கினர்.
இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்வதற்காக ரஜினியும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தனர். அவர்களை கோயில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கோயில் மகா துவாரம் முன்பு வரவேற்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார்.
பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதங்கள் செய்து வைத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.