இரவின் நிழல் ஓரு அசாத்திய முயற்சி ரஜினி வீட்டிற்கு அழைத்து பாராட்டு

0
11

இரவின் நிழல் திரைப்படம் ஓரு அசாத்திய முயற்சி ரஜினிகாந்த் பார்த்திபனை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டி மகிழ்ந்தார்.

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் செல்வாக்கு மிக்கவராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக திரைத்துறையின் நடித்து வருபவர் அவருக்கு 70 வயதை கடந்தாலும் அவர் கதாநாயகனாக வருவதையே விரும்பும் ரசிகர்கள் பட்டாளம் என்றும் மவுசு குறையாத நபராக திரைத்துறையில் வலம் வருபவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி,  தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார்.

இரவின் நிழல் ஓரு அசாத்திய முயற்சி ரஜினி வீட்டிற்கு அழைத்து பாராட்டு

அந்த வகையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” படத்தை பார்த்து விட்டு பார்த்திபனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அத்துடன் ஒரு லெட்டரையும், எழுதியுள்ளார். அதில் ” இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழுபடத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுகளையும், பெற்று, உலக சாதனை படைத்திருக்கும். நண்பர் பார்த்தியன் அவர்களுக்கும் ..அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ. ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் .. முக்கியமாக படம்பிடித்த  ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்” என நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.

இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here