நடிகர் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைராலாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். சூர்யா சிவா முதன் முதலாக இணையும் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சூர்யா பல வெற்றி படங்களை தன் நடிப்பால் பெற்று தந்தவர். இயக்குனர் சிறுத்தை சிவாவும் பல ஹீட் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தந்துள்ளார். அஜித்தை வைத்து இதுவரை மூன்று படங்களை முடித்துள்ளார். தற்போது முதன் முதலாக சூர்யாவுடன் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. முதல் 5 நாள்கள் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள இடங்களில் எடுக்கப்பட்டது. பின் கோவாவில் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அங்கு பிரம்மாண்டமான சண்டை காட்சியை படமாக்க இயக்குனர் சிவா திட்டமிட்டு இருக்கிறார்.

அதில் சுமார் 250 Bouncer-கள் பங்குபெறும் காட்சி படமாக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. சூர்யா – சிவா இணைந்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான புதிய அப்டேட் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்க உள்ளனர் என தகவல் வெளி வந்தது. இந்நிலையில் இன்று காலை சூர்யா இன்று டிவிட்டர் கணக்கு மூலம் அறிவிப்பை வெளியிட்டார்.
We seek all your good wishes as we begin our adventure!https://t.co/18rEmsLxom #Suriya42 @directorsiva @ThisIsDSP @DishPatani @iYogiBabu @vetrivisuals@kegvraja @StudioGreen2 @UV_Creations
— Suriya Sivakumar (@Suriya_offl) September 9, 2022
இந்த திரைப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இருக்கும் என பட குழுவினர் கூறுகின்றனர்.
இந்த திரைப்படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். அதே போல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டர் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக கூறி மகிழ்ச்சியில் உள்ளனர்.