சச்சின் டெண்டுல்கரும் நடிகர் சூர்யாவும் மும்பையில் சந்திப்பு

0
26

மும்பை: நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தற்போது மும்பையில் குடியேறியுள்ளனர். அவர்களது மகள் தியா அவரது மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்தார். தற்போது அவரது படிப்பிற்கு ஏற்ற இடமாக மும்பை இருப்பதாக சூர்யாவும், ஜோதிகாவும் முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்கள் அங்கு ஒரு சொந்த வீடு வாங்கியுள்ளனர். ஜோதிகாவும் அவரது மகன் தேவும் அங்கேயே உள்ளனர். சமீபத்தில் மும்பை வீட்டில் ஜோதிகா, தியா, தேவ் ஆகியோர் நாய் ஒன்றை வளர்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. சூர்யா ஷூட்டிங்கின் போது சென்னையில் உள்ள வீட்டில் அப்பா, அம்மாவுடனும் பிறகு மும்பைக்கும் பறந்து விடுகிறார்.

surya meets sachin tendulkar in mumbai

இந்நிலையில் சூர்யா யதேச்சையாக நேற்று சச்சின் டெண்டுல்கரை மும்பையில் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சூர்யா, மரியாதையும், அன்பும் என பதிவிட்டிருக்கிறார். இது குறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, ‘இது எதிர்பாராத சந்திப்பு. இதற்கு பின்னால் எந்த காரணமும் கிடையாது. சூர்யாவுடன் சந்திப்பு நடந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்’ என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here