ஹனு ராகவபுடி: துல்கர் சல்மான், மிருனாள் தாக்கூர், ராஷ்மிகா நடித்த படம் ‘சீதா ராமம்’. தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கியிருந்தார். பான் இந்தியா படமான இது வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தியில் படம் இயக்க ஹனு ராகவபுடி முடிவு செய்திருக்கிறார். இதற்காக ராம் சரண், நானி ஆகிய ஹீரோக்களிடம் கதை சொன்னார் ஹனு ராகவபுடி. ஆனால் அவர்களிடம் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் இதில் நடிக்க முடியாத சூழல் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சூர்யாவிடம் ஹனு ராகவபுடி கதை கூறியிருக்கிறார். இந்த கதை சூர்யாவுக்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர் கால்ஷீட் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது. இப்போது சூர்யா சிவா இயக்கத்தில் சரித்திர கால கதை படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடித்தபடி ஹனு ராகவபுடி படத்திலும் அவர் நடிப்பார் என தெரிகிறது. இந்த படத்தை தெலுங்கு பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.