ரோஹூத் சர்மா மற்றும் விராட் கோலியின் சாதனைகளை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்.
மைதானத்தில் அனைத்து இடங்களில் பந்தை அடித்து ஆடுவதால் இவரை 360 என்று அழைக்கின்றனர். மைதானத்தின் அனைத்து கோனங்களிலும் இவர் அடிக்கும் பந்துகள் சென்ற அடையும் அப்படி ஓரு திறைமையை தன்னுள் வைத்துள்ளவர் இந்திய கிரிக்கெட் அணியின் சூர்யகுமார் யாதவ். இவரது விளையாட்டு திறமையை வியந்து பார்த்ததாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஓரு திறமையான மனிதரை தான் இந்திய அணி வெகு காலமாக தேடியது தென் ஆப்ரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் போலவும் இந்திய அணியின் முன்னாள் விளாயாட்டு வீரரான ஷேவாக்கை போலவும் இவருக்கு திறமைகள் இருப்பதால் இந்திய ரசிகர்கள் இவரை பாராட்டுகின்றனர்.

இந்திய அணி நியூசிலாந்தில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள சென்றுள்ளது. அங்கு 3 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணி சமமான வெற்றியை பதிவு செய்தது. இந்த டி20 3 வது போட்டியில் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சூர்யகுமார் அவுட்டாகி வெளியேறினார். அப்போது விராட்டின் சாதனையை சமன் செய்தார்.
இந்த டி20 தொடர் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 2 வது ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 11 பவுண்டரி 7 சிக்சர் மொத்தம் 111 ரன்களை அடித்திருந்தார். இதன் மூலம் ஓரே ஆண்டில், டி20 போட்டியில் 2 சதங்களை அடித்து ரோஹூத்தின் சாதனையை சமன் செய்தார். அடுத்த 3 வது போட்டியில் 13 ரன்களில் வெளியேறினார் அப்போது விராட் கோஹ்லி சாதனை சமன் செய்து விட்டு வெளியேறினார்.
டி20 போட்டிகளில் ஓரே ஆண்டில் 1500 ரன்களை கட்நது சூர்யகுமார் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அடைந்தார். இதற்கு முன் விராட் இந்த சாதனையை படைத்து முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இதையும் படியுங்கள்: உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா
இதுவரை சூர்யகுமார் யாதவ் சர்வதேச அளவில் 41 டி20 போட்டிகளில் 1519 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.