ஐசிசி பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளினார் சூரியகுமார் யாதவ்.
டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் அடுத்த நடக்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்ரிக்காவுடன் இந்திய அணிக்கும் டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இதில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மூன்று போட்டிகள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடியுள்ளார். தனது திறமையை முழுவதுமாக விளையாட்டில் காட்டியுள்ளார். நல்ல ஸ்டிரைக் ரேட் பெற்று டி20 ரேங்கிங் பேட்டர்சில் மூன்றாவதாக இருந்த பாகிஸ்தான் கோப்டன் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்நிலையில், ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் (780 ரேட்டிங் புள்ளி) மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (825 ரேட்டிங் புள்ளி) உள்ளார். இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார்.
இதையும் கவனியுங்கள்: டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
கே.எல்.ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14ஆவது இடத்திலும் கோலி 16ஆவது இடத்திலும் இருக்கின்றனர். அதேபோல், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
ஆசிய கோப்பையில் பாபர் 6 போட்டிகளில் 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். டி20 போட்டிகளில் ஐசிசி பேட்டிங் தரவரிசை1. முகமது ரிஸ்வான் – 825 ரேட்டிங் புள்ளிகள் 2. ஐடன் மார்க்ரம் – 792 3.சூர்யகுமார் யாதவ் – 780 4. பாபர் ஆசம் – 771 5. டேவிட் மாலன் – 725 6. ஆரோன் பிஞ்ச் – 715 14. ரோஹித் சர்மா – 602 16. விராட் கோலி – 591 18. கேஎல் ராகுல் – 587