சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாதனைகளை அள்ளி வரும் ஸ்கை

0
4

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாதனைகளை அள்ளி வரும் சூர்யகுமார் யாதவ். டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளார்.

இந்தாண்டின் தொடரிலேயே தனது ரன் எண்ணிக்கையை தொடங்கி அசத்தியுள்ளார். யாதவ். கடந்த ஆண்டு டி20 போட்டியில் சர்வதேச பட்டியலில் முதல் நபராக இருந்து வந்தவர். தற்போது புத்தாண்டு தொடக்கத்திலும் அதனை நிரூபித்து வரும் வண்ணம் தனது விளையாட்டை ஆடி வருகிறார்.

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 7 ரன்களில் அவுட்டாகினார். இரண்டாவது டி20 போட்டியில் அரைசதம் கடந்தார். மூன்றாவது போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து அரங்கையே அலற விட்டார். இவர் 45 பந்துகளில் சதம் விளாசினார். 51 பந்துகளில் 112 ரன்களை குவித்திருந்தார். இதில் 9 சிக்ஸர்கள் 7 பவுன்டரிகளும் அடங்கும்.


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாதனைகளை அள்ளி வரும் ஸ்கை

இதனால் இலங்கைக்கு எதிரான தொடரின் இறுதி போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த இறுதி போட்டி முடிந்த போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் சூர்யகுமார் யாதவும் போட்டி அளித்தனர். அதில் ராகுல் டிராவிட் நல்ல வேலை என்னுடைய பேட்டிங்கை இவர் பார்த்தில்லை எனக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

ஏனெனில், ராகுல் டிராவிட் தடுப்பாட்ட மன்னன் மற்றும் இந்திய அணியின் தூண் என்று வர்ணிக்கப்படுபவர் பவுலிங் செய்யும் எதிரணியை ரன்கள் அடிக்காமல் தடுப்பு சுவர் போல நின்று நோக செய்பவர் இதனால் அனைவரையும் அவர் பேசிய செய்தி சிரிப்பலையில் ஆழ்த்தியது.

மேலும், பல சாதனைகளை குவித்து வரும் இளம் வீரராகவும் அறியப்படுகிறார். குறைந்த இன்னிங்ஸில் டி20யில் 3 சதம் விளாசியவர் மற்றும் அதிகமுறை 110 ரன்களை எடுத்தவர். டி20 போட்டிகளில் அதிக ஸ்டைரைக் ரைட் வைத்திருப்பவர். ஓரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இரண்டாவது வீரர். டி20 கிரிக்கெட்டில் 1500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.

2023ம் ஆண்டின் டி20 போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரானார். சர்வதேச டி20ல் 43 இன்னிங்ஸில் 3 சதம் 14 அரைசதங்களை விளாசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: INDVSSL T20: இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here