சூர்யா: பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள், வீடியோக்கள் இரகசியமானதாக வைக்கப்படும். படம் ரிலீசாக போகும் நேரத்தில்தான் அந்தந்த படத்தின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். சில சமயங்களில் படம் வெளியாகும் வரை புகைப்படங்களை வெளியிடாமல் சஸ்பென்ஷாக வைத்திருப்பார்கள். அதன் நோக்கம் கதையின் தன்மை இரசிகர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும், படத்தை பார்க்கும் போதுதான் அதன் உண்மை தன்மை இரசிகர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவும்தான்.
ஆனால் தற்பொழுதெல்லாம் தொழில் நுட்ப வளர்ச்சியினால் படம் வெளிவருவதற்கு முன்பே முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்பு காட்சிகளையும், வீடியோக்களையும் சில சமயங்களில் முழு படத்தையும் இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டு விடுகிறது. இதே போல் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளும் லீக் ஆனது. இந்நிலையில் இது தொடர்பாக சூர்யா தரப்பிலிருந்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்ட அறிக்கை.
எங்கள் தயாரிப்பு திரைப்படமான ‘சூர்யா 42’ படப்பிடிப்பு தளங்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்படுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் ரத்தம் மற்றும் வேர்வையை உள்ளடக்கியது. இந்த படத்தை அனைவருக்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமான அனுபவமாக தர விரும்புகிறோம். எனவே யாரேனும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும். படம் வெளியாகும் வரை எந்த விதமான படப்பிடிப்பு காட்சிகளையும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும வீடியோக்கள் வெளியிடுபவர்கள் மீது உரிமை மீறல் தடை சட்டத்தின் கீழ் சட்டப்படி டநடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.