சுஷ்மிதா சென்: தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சுஷ்மிதா சென். பிறகு ‘முதல்வன்’ படத்தில் ஷக்க லக்க பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார் சுஷ்மிதா சென். இந்தியில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் உலக அழகி பட்டம் வென்றவர். இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ள வில்லை. கடந்த ஆண்டு தனது காதலை பிரிந்தார். பண மோசடியில் ஈடுபட்டு லண்டனில் பதுங்கியுள்ள லலித் மோடியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுஷ்மிதா வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுஷ்மிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது ஆஞ்சியோ செய்துகொண்டு மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார். இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். தற்போது தான் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சுஷ்மிதா சென்னுக்கு மது பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.