சுவிட்சர்லாந்து: உலகின் மீக நீளமான பயணிகள் ரயிலை இயக்கி சாதனை புரிந்துள்ளது. இதன் நீளம் சுமார் 1.9.கி.மீ, 100 பெட்டிகளைக் கொண்டது.
சுவிட்சர்லாந்தின் பொறியியல் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும் அந்நாட்டின் ரயில்வேயின் 175 வது வருடத்தை கொண்டாடும் வகையிலும் ஓரு சாதனை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, உலகின் நீளமான பயணிகள் ரயிலை இயக்க திட்டமிட்டது இதனை ரேசியன் ரயில்வே இயக்குனர் ரெனாடோ ஃபாசியாட்டி தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலைத் தொடர்களின் கண்கவர் வழித்தடங்களின் வழியாக பயணத்தை தொடர்ந்து சாதனை படைத்துள்ளது. ஆல்ப்ஸ் மலையோரம் அமைந்துள்ள பிரெடா முதல் பெர்குவென் வரை உள்ள அல்புலா/பெர்னினா பாதையில் ரெசின் ரயில்வே நிறுவனம் 1.9-கிலோமீட்டர் நீளமுள்ள (1.2-மைல் நீளம்) ரயிலை 100 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கியது.

இந்த பாதை 2008 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது. இந்த பாதை 22 சுரங்கங்கள் வழியாக செல்கிறது. அவற்றில் சில மலைகள் வழியாகவும், வளைந்த சுண்ணாம்பு பாலங்கள் உட்பட 48 பாலங்கள் வழியாகவும் செல்கிறது.
சுமார் 25 கிலோமீட்டர்கள் (15.5 மைல்கள்) தூரம் செல்லும் முழு பயணம் முடிய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. 25 பிரிவுகள் கொண்டு ஆல்ப்ஸ் மலைகள் வழியாக செல்லும் இந்த பாதையில் ரயில் பயணிகள் ஆர்வத்துடன் பலர் பங்கேற்றனர். இது புதுவித அனுபவத்தை தருவதாகவும் மனதை கவர்வதாகவும் உள்ளதாக பயணம் செய்த அனுபவத்தை பகிர்ந்தனர்.